ரயில் சேவையின் வசதிகளை அதிகரிக்காது ரயில் கட்டணத்தினை 15% இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளமையானது நியாயமற்றது என நுகர்வோர் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பேரூந்து சங்கங்கள் பொதுமக்களை கருத்திற் கொள்ளாது அடிக்கடி கட்டண அதிகரிப்புக்களை மேற்கொள்வதால் பொதுமக்கள் நிவாரணமாக ரயில் சேவையினை பயன்படுத்துவதாகவும், தற்போது ரயில் சேவையிலும் கட்டண அதிகரிப்புக்களை முன்னெடுப்பது நியாயமற்றது எனவும் குறித்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்திருந்தார்.
ரயில் திணைக்களமானது நிவாரண விலைக்கு மக்களுக்கு சேவை செய்வதற்காக வரிப்பணம் செலுத்தி முன்னெடுக்கப்படும் நிறுவனம் எனவும், அதனை ஒழுங்காக நடாத்துவற்கு உரிய அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.