ரயில் தடம்புரண்டதில் களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு.

அவிஸ்ஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் ஒன்று மஹரகம – பமுனுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை தடம் புரண்டுள்ளது.

இதனால் களனிவெளி  ஊடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.