ரயில் நிலையங்களில் மற்றும் ரயில் பாதைகளில் குப்பை கொட்டும் பயணிகளுக்கு வருங்காலங்களில் தண்டப்பணம் விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயணிகளால் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால், குறித்த அச்சூழல் அசுத்தமடைவதாக ரயில்வே திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடு பூராகவுமுள்ள பிரதான ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்கள் 351இல், நேற்று(16) முதல் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.