ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று தீர்மானம்மிக்க கலந்துரையாடல்

(FASTNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கத்தினர் நேற்று(19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.

எனினும் நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து, இன்று(20) பிற்பகல் 02 மணிவரையில் குறித்த இந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரயில் தொழிற்சங்கம் மற்றும் நிதி அமைச்சர் ஆகியத்தரப்புகளுக்கு இடையிலான தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று(20) பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கலந்துரையாடலில் சாதகமான தீர்வு காணப்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ரயில் பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.