(UTV|COLOMBO)- ரயில் தொழிற்சங்கங்கள் சில இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(22) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்திலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் திட்டமிட்டபடி இன்று(22) நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.