ரவி’யின் வெளிவிவகாரப் பதவி அமுனுகம’விற்கு…?

வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகித்து வரும் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலக உள்ளதால் குறித்த பதவிக்கு சரத் அமுனுகம நியமிக்கப்படலாம் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்தப் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல வேண்டும் என்ற போதிலும், இராஜதந்திர விவகாரங்களில் அனுபவம் உள்ள அமுனுகமவை நியமிக்க பிரதமரும் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சரத் அமுனுகமவின் தற்போதைய அமைச்சுப் பதவி திலக்க மாரபனவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

 

(rizmira)