ரவிராஜ் கொலைக்கு வேட்டு வைத்த துப்பாக்கி இராணுவத்தினருடையதாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார்.

மேலும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும்  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.