முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்பிருப்பதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே பிள்ளையான மீது ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்தன.
இந்த சந்தேகத்தின் காரணமாகவே குற்றப் புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை தடுத்து வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நடராஜா ரவிராஜ் கொலைக்கும் பிள்ளையானுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.