நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முரண்பாடுகளை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
முரண்பாட்டு நிலைமைகளின் போது ஊடகங்களில் கருத்து வெளியிடுவதனை தவிர்க்குமாறு இருவருக்கும் ஜனாதிபதி நேற்று அறிவுரை வழங்கியுள்ளார்.
தேயிலை நிதியத்திற்கு சொந்தமான பணத்தை திறைசேரிக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியிருந்தது.
இந்த முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவுரையின் பின்னர் இதனை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுப் பதவியை துறக்கப் போவதாக நவீன் திஸாநாயக்க ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.