ரஷ்யாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

(FASTNEWS|RUSSIA) ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று . 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை இங்குள்ள தலைநகரம் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே ஏற்பட்ட இந்நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.