ரஷ்யா விமான விபத்து குறித்து தீவிர விசாரணை…

ரஷ்யாவில் 71 பேரை பலிகொண்ட விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் டோமோடிடோவோ விமான நிலையத்தில் இருந்து ஒர்ஸ்க் நகருக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாஸ்கோவுக்கு அருகே உள்ள ராமென்ஸ்கை மாவட்டத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என விமானத்தில் இருந்த 71 பேரும் உயிரிழந்தனர்.

விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் ஆரம்பமாகியுள்ளது. இதை மேற்கொண்டு வரும் விசாரணைக்குழுவினர், தொழில்நுட்ப கோளாறு, மனித தவறு மற்றும் மோசமான வானிலை போன்றவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.