ரஷ்யாவின் இராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 26 பேர் பயணிகள், 06 பேர் விமானத்தில் பணிபுரிந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான தளத்தில், An-26 விமானம் இறங்க முற்பட்டபோது குறித்த இந்த விபத்து நடந்துள்ளது, என அமைச்சர் ரஷ்ய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என தெரிவித்துள்ள உள்ள ரஷ்யா, தொழில்நுட்ப கோளாறுதான் குறித்த இந்த விபத்துக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
#reshma