ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் விளாடிமிர் புதின்…

ரஷ்ய அதிபர் பதவிக்கு அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷ்யா நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புதின், கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது 6 ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக நேற்று(06) அறிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று அதிபரானால் 2024 ஆம் ஆண்டுவரை நீடிக்கும் புதினின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.