ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு 5 பேரை கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிபர் புதினுக்கு வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ரஷியாவின் ‘எம்.ஐ.8’ ரக ராணுவ ஹெலிகாப்டர் குண்டு வீச்சு நடத்தியது. இந்த ஹெலிகாப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்.
இதனால் ஹெலிகாப்டர் எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இத்தாக்குதலில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர்.
இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆன்லைனில் புதிதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், சிரியாவில் அமெரிக்காவுடன் இணைந்து குண்டு வீசும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 5 தீவிரவாதிகள் அமர்ந்துள்ளனர்.
அவர்களில் ஒருவன் கத்தியை காட்டிய படி புதினுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் மிரட்டுகின்றான். புதின் கவனியுங்கள். ‘நாங்கள் ரஷ்யா வருவோம். வீட்டிற்கே வந்து உங்களை கொலை செய்வோம்’ என தெரிவிக்கிறான்.
இந்த வீடியோ 9 நிமிடம் ஓடுகிறது. இதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பகிரங்கமாக பொறுப்பு ஏற்க வில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் வலையத்தளத்தில் இது வெளியாகி இருக்கிறது.