ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மெரியா ஷரபோவா’வுக்கு மீளவும் வாய்ப்பு..

ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதுவராக மீண்டும் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மெரியா ஷரபோவா நியமிக்கப்படவுள்ளார்.

இதனை ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையால் அவருக்கு இரண்டு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டில் அவரது தண்டனைக் காலம் 15 மாதங்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து சேவையை முன்னெடுக்க விரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.