ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விஜயம் விரைவில்

ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர் சேர்ஜே லாவ்ரோவ் (Sergey Lavrov) விரைவில் இலங்கைக்கான தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது .

பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேராவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே லாவ்ரோவ் இலங்கை விஜயத்துக்கான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரத்தில் ரஷ்யாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து ​கொண்ட போதே பிரதியமைச்சரால் இவ் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வௌிவிவகார அமைச்சரின் வருகையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான கொள்கைகள் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திடப்படவுள்ளன.

அத்துடன் அவரது விஜயத்தின் போது இலங்கையில் புதிய ரஷ்ய தூதரகமும் திறந்து வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.