ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்…

ராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக, பத்தரமுல்லை மற்றும் பொரள்ளைக்கிடையிலான வீதிகளின் வாகனப் போக்குவரத்து இன்று(24) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை, வீதியின் இரு சந்திகள் மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் இருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் இரண்டு சந்திகள் மற்றும் பொரளையில் இருந்து பத்தரமுல்லை நோக்கிச் செல்லும் இரண்டு சந்திகளும், வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்படும்.

இந்நிலையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நுகேகொடையில் இருந்து பொரளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஹைலெவல் வீதியையும், களனியில் மற்றும் கடுவலைக்கு பயணிக்கும் வாகனங்கள் கொலன்னாவை, ஒருகொடவத்தை ஊடாகவும் பயணிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அதிவேக வீதி ஊடாக அதுருகிரியவுக்கு சென்று பொரளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கடுவலை வாயில் வரை சென்று பொரளைக்கு பயணிக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.