ராஜகிரிய புதிய மேம்பாலம் அமையப்பெறும் வரைபடம் குறித்த விபரம்… (Photos)

ராஜகிரிய நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் முதல் கட்ட வேலைகளை நிறைவுக்கு கொண்டுவர குறைந்தது 9 மாதங்களாவது செல்லும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

ஒருவருட காலப்பகுதியில் குறித்த மேம்பாலமனது மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கட்டமாய் நிர்மாணிப்பது ஒருவழிப்பாதையாகும். மேலும் குறித்த வழிப்பாதை  இரட்டை வழிப்பாதையாகவே வடிவமைக்கப்படும் .ஆனால், முதல் ஒருவழிப்பாதை மக்கள் பாவனைக்கு வழங்கிய பின்னரே இரண்டாவது ஒருவழிப்பாதையின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படும்.

ராஜகிரிய பாதையில் செல்லும் 177ம் இலக்க பஸ் வண்டி செல்லும் பிரதான பாதை மற்றும் புத்கமுவ பாதையுடன் ஒன்றோடொண்று இணையும் HSBC கட்டிட இட வளைவு மேம்பாலத்தின் ஒரு முனையாக தெரிவிக்கப்படுகிறது.  அடுத்த முனையாக ஜனாதிபதி செயலகம் மற்றும் தேர்தல் ஆணையாளர் காரியாலயம் வழியாக திரும்பும் பஸ் இல 177 பயணிக்கும் பாதைக்கு மேலாக அமையவுள்ளது.மேம்பாலத்தின் முழு நீளம் 558மீட்டர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

ராஜகிரிய மேம்பால நிர்மாணப் பணிகள் நாளை(31) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆதலால், பாதசாரிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாவ திசையிலிருந்து வரும் வாகனங்கள் தலவதுகொட ஊடாக சென்று நுகேகொட ஊடாக பயணத்தினை தொடரலாம். மாலபே திசையிலிருந்து பயணிக்கும் சாரதிகள் கொஸ்வத்த பிரதேசத்தினூடாக முல்லேரியா ஊடாக சென்று பயணத்தினை தொடரலாம், எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவது ராஜகிரிய மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலினை  கட்டுப்படுத்துவதற்காகும். ஆதலால், குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை அனுசரித்துப் போகுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சு சாரதிகளிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Hammersmith_flyover_6523r

i5-beltline-flyover1full

RAJAGIRIYA3a-322x176

Rajagiriya-Flyover