கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் நடந்த விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சந்தேக நபரா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை எதிர்வரும் 28ம் திகதி வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய இன்று அறிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28ம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு சொந்தமான வாகனத்தில் மோதுண்டு சந்தீப் சம்பத் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வெலிகடை பொலிஸார் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.