ராஜபக்ஷ கூட்டத்தினர் இனவாதத்தை தூண்டி அதற்கு துணை நின்றனர் – முஜீபுர் ரஹ்மான் (VIDEO)

எமது செய்தித்தளமான பாஸ்ட் நியூஸ் ஆனது 2015 பொதுத் தேர்தலினை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் செவ்வியில் இம்முறை ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான முஜீபுர் ரஹ்மான் அவர்களை இணைத்துக் கொண்டோம்.

இதன் போது அவர் நமது சேவைக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போது;

கடந்த அரசாங்கமானது இனவாதத்தை தூண்டுவதில் கைவரிசையினை காட்டிய போதிலும் மஹிந்த ராஜபக்ஷவும் குழுமியிருக்கும் கூட்டங்களும் வேடிக்கை பார்த்தனர். குறிப்பாக அளுத்கம கலவரமானது திட்டமிட்டு செய்யப்பட இனவாதமே என மேற்கண்ட செவ்வியில் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணியில் இவ்வாறான இனவாதங்களுக்கு இடமளிக்காது புதியதோர் நல்லாட்சியினை நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் குறித்த செவ்வியில் அவர் மேலும் கருத்துப் பகிர்ந்தார்.

முழுமையான செவ்வி :-

[youtube url=”https://www.youtube.com/watch?v=5nn1d-Q6mUg” width=”560″ height=”315″]