ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(23) நடைபெற்றது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயசுழற்சியை வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து, 170 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது தகுதிகான் சுற்றுக்கு தகுதி பெற்றது.

