ராஜாங்கனை குடிநீர் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

தம்புத்தேகம நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு காரணமாக அமைந்த ராஜாங்கனை குடிநீர் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நீர் வழங்கல் சபையின் அதிகாரிகளுக்கு நேற்று(28) ஆலோசனை வழங்கியதாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜாங்கணை நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்தி, தனியார் துறையினரால் குறித்த இந்தக் குடிநீர் திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது.

குறித்த திட்டத்துக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்துக்கு எதிராக தம்புத்தேகமயில் விவசாயிகள் நேற்று(28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma