(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்களில் அமைச்சர் ராஜித சேனரத்ன தலையில் நெருப்பினை கட்டிக் கொண்டு இந்நாட்களில் இருப்பதாக அவரது மனைவி சுஜாதா சேனாரத்ன தன்னிடம் கூறியதாக கெப்டன் உதய திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை கம்புறுபிடிய கூட்டுறவு அமைப்பாளரான அவர் இதனை உறுதிப்படுத்தும் குரல் பதிவினையும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.
பொலிஸ் குற்ற புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை அளித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ராஜித சேனாரத்னவின் குடும்பம் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அமெரிக்கா நோக்கி பயணமாவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராஜித சேனாரத்ன மேற்கொண்ட சட்டவிரோத செயல்கள் குறித்து தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அது தொடர்பில் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்ததாகும் அவர் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர் மற்றும் டுபாய் நாடுகளில் உள்ள வீடுகள் குறித்தும் ராஜித பதில் கூற வேண்டும் என கெப்டன் உதய திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.