சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சத்துர சேனாரத்னவுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் களுத்துறை மாவட்ட தலைமை பதவி தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் தலைமை பதவிக்கு அமைச்சர் அஜித் பெரேரா பெயரிடப்பட்டிருந்தார். இந்நிலையில் நல்லாட்சி முன்னணியுடன் நேற்று ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கமைய களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியல் தலைமைத்துவம் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு அஜித் பெரேரா எதிர்ப்புத் தெரிவித்தமைக்கு அமைய, ராஜித சேனாரத்ன தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது மகன் சத்துர சேனாரத்ன கம்பஹா மாவட்டத்திற்கு பெயரிடப்பட்ள்ளார்.
தான் ஹம்பாந்தோட்டை, பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஆயத்தம் எனவும், முடியும் என்றால் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவின் மகன் சத்துர சேனாரத்ன குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(riz)