தேர்தல் பணிகளுக்காக தனது நீண்டகால நண்பரான அவன்கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதியினால் வழங்கப்பட்ட பணத்தை அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்துவிட்டதாகவும், இதனால், அந்தப் பணம் மீண்டும் சேனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் டொக்டர் சசுர சமரசுந்தர தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கீழுள்ள அரச ஔடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை டொக்டர் சசுர சமரசுந்தர வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தளத்தில் வெளியான குரல் பதிவுடனான வீடியோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து சசுர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவன்கார்ட் தலைவர் நிஷாங்க, அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 50 லட்சம் ரூபா வழங்கியுள்ளதாகவும் குறித்த குரல் பதிவுடனான வீடியோவில் பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பணம் உடனடியாக நிஷாங்கவிற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டதற்கான தொலைபேசி உரையாடலின் பதிவை சசுர சமரசுந்தர வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சிலர் அவன்கார்ட் நிறவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், தமக்கும் சிலர் பணம் கொடுக்க முன்வந்த போதிலும், அந்த பணத்தை தாம் நிராகரித்துவிட்டதாகவும் ராஜித சேனாரத்ன இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
டொக்டர் சமரசுந்தரவிற்கும் நிசாங்க சேனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சம்பாசனை குறித்த ஓடியோ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
[youtube url=”https://www.youtube.com/watch?v=2BNLKP7Sdgk” width=”560″ height=”315″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=8P0P4K1RYPA” width=”560″ height=”315″]