“மருந்தின் விலை குறைப்பு தொடர்பில் நடைபெற்று வரும் ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், தான் பதவியிலிருப்பதில் பயனில்லை” என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவராக பேராசிரியர் அசித டீ சில்வா பதவியேற்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (20) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையபற்றிய அவர், “மேலும், மூன்று மாதங்களில் குறைந்த விலையில் சிறந்த ஒளடதங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் உணரும் சேவையொன்றை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு புதிய தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.