ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகுகிறார்  ரொனால்டோ…

லிவர்பூல் அணிக்கெதிரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் தொடரை ரியல் மாட்ரிட் அணி ஹாட்ரிக் முறையில் வென்று சாதனை படைத்துள்ளது.

குறித்த இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அந்த அணியின் நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோ தனது வருங்காலம் குறித்து வரும் நாட்களில் விடை தெரியும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது;

“எதிர்வரும் நாட்களில் எனது வருங் காலத்துக்கான விடை கிடைக்கும். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியது, மிகவும் நன்றாக இருந்தது.  அதற்காக நான் அணியை விட்டு செல்கிறேன் என கூறவில்லை. வரும் நாட்களில் பார்க்கலாம்” என்றார்.

ரொனால்டோவின் இந்த பேச்சு ரியல் மாட்ரிட் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.