ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது நடாத்தபடவிருந்த IS தாக்குதல் ஒன்றிற்கான குழுவொன்று கைது

எதிர்வரும் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போது தீவரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட குழுவொன்றின் 10 உறுப்பினர்கள் பிரேசில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் இல்லை எனவும் எவ்வாறாயினும் , அந்த அமைப்பை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு தயாரான குறித்த குழுவை  , காவற்துறையின் முன் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கைது செய்ய முடிந்ததாக பிரேசிலின் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.