ருகுணு பல்கலைக்கழகத்தில் இரும்பிலான அறைகளுக்குள் பாலியல் பகிடிவதை…

(FASTGOSSIP | COLOMBO) – ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்காக அறை உள்ளதாகவும், புதிய மாணவர்கள் பாலியல் ரீதியாகவும் பகிடிவதை செய்யப்படுவது தொடர்பில் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் காமினி சேனாநாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ருகுணு பல்கலைகழகத்தின் ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

தான் குறித்த இரும்புக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றதாகவும், அப்பகுதிக்குள் 15 வருடங்களாக எந்தவொரு பேராசிரியரோ அல்லது பாதுகாப்பு பிரிவினரோ சென்றதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு பகிடிவதை செய்வதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகும் அது தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் அதற்கு உபயோகித்த முக்கிய சான்றாக ‘condom’ கட்டளைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும் இது தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் கூறுவதில் அசிங்கப்படுகிறேன் எனவும் தெரிவித்த உப வேந்தர், இதன்போது புதிய மாணவர்களை ஆர்ப்பாட்டங்களிற்கு அழைத்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் யாரும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதில்லை எனவும் புதிய மாணவர்கள் பலவந்தமாக இவ்வாறான செயற்பாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.