(FASTGOSSIP| COLOMBO) – ருஹுனு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை கொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்துவதாக ஊடக சந்திப்பு ஒன்றில் மாணவர் ஒருவர் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்ததை தொடர்பில் பகிடிவதை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த மாணவர்கள் அழைக்கப்பட்டு எச்.ஐ.வி (HIV) பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் குறித்த ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தர்ஷ உதயங்க எனும் மாணவனின் கருத்தில் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக விவரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma