ருஹுனு – பேராதனை பல்கலைகழகங்களின் மூடப்பட்ட பீடங்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – ருஹுனு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(29) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த பல்கலைக்கழகங்களது நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ருஹுனு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள், முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இறுதி ஆண்டின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் இன்று(29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்பதாகவும் ருஹுனு பல்கலைகழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.