(FASTNEWS|COLOMBO) – ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் முகாமைத்துவ பீடத்திற்கான இறுதியாண்டு கல்வி நடவடிக்கைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
முகாமைத்துவ பீடத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் வருடங்களுக்குரிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.