ரூபவாஹினி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் இருவருக்கு எதிராக வழக்கு..

அரசுக்கு ரூபா.34,54279 நட்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட முறைப்பாடுகள் ஐந்திற்கு கீழ் இலங்கை ரூபவாஹினி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் இருவரான சந்திரபால மற்றும் விமலசேன ரூபசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(02) கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 டிசம்பர் 16ம் திகதி முதல் 2015 ஜனவரி 15ம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய தொலைக்காட்சியினூடாக நிகழ்த்தப்பட்ட நிகழ்சிகளை செயற்கைக்கோள் தொழில்நுட்பம் ஊடாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்ப நாடுகளில் இலங்கை அலைவரிசையினூடாக ஒளிபரப்பாக்க இத்தாலியின் ‘நோவா விசன் செட்டலைட்’ இனை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரமின்றி மற்றும் உடன்படிக்கைகள் இன்றி வழங்கப்பட்டமையே இதன் பிரதான குற்றச்சாட்டாகும்.

அதன்படி, மேற்குறித்த இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

(rizmira)