(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1,474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் தமது எதிர்ப்பை முன்வைத்த நிலையில் வாக்கெடுப்பு இல்லாது கணக்கு வாக்கெடுப்பு சபையில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.