நூறு ரூபாய் தொலைந்த வேதனையில் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள கல்யான் புரியை சேர்ந்தவர் சிவம் (வயது 18) இவர் அந்த பகுதியில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் திருமண விழா நடைபெற்றது. அதில் அவர் வேலை செய்தற்காக அவருக்கு சம்பளமாக ரூ.300 கிடைத்தது. இதில் நூறு ரூபாய் அவர் தொலை விட்டதாக கூறப்படுகிறது. தொலைந்த ரூபாய் நோட்டை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனை அடந்த சிவம் சோகமாக வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிவம் ரூ.100 தொலைத்துவிட்ட வேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.