சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சிங்கபூருக்கு கொண்டு செல்ல முயன்ற 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த பணம், இன்று வியாழக்கிழமை அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பணம், பயணப் பொதியில் இருந்த அலங்கார பொருட்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.