சிரியாவில் தொடரும் உள்நாட்டு போர் நடந்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அப்போது பெண் ஊடகவியலாளர் பெட்ரோ லஸ்லா என்பவரால் குழந்தையுடன் இருந்த ஒசாமா அப்துல் என்ற சிரிய அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார்.
இந்த வீடியோ தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பெண் ஊடகவியலாளர் பெட்ரோ லஸ்லாவின் இந்த செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து பெட்ரோ லஸ்லாவை பணி நீக்கம் செய்வதாக அவர் வேலைப்பார்த்த நிறுவனம் அறிவித்தது
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒசாமா அப்துல் சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்று தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள கெனாஃபே கால்பந்து அகாடமி அவருக்கு கால்பந்து பயிற்சியாளர் பணியளிக்க முன் வந்தது.
இதைத் தொடர்ந்து ஒசாமா அப்துல் கடந்த புதன்கிழமை தனது மகன்கள் சையத், அகமது ஆகியோருடன் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு வந்தார்.
அவருக்கு மாட்ரிட் புறநகரான கெடாஃபேவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த கடந்த சனிக்கிழமை ஸ்பானீஷ் லீக் தொடரில் ரியல்மாட்ரிட் – கிரனடா அணிகள் மோதின.
இதில் கால்பந்து வீரர்களை மைதானத்திற்கு அழைத்து வரும் குழந்தைகளில் ஒசாமா அப்துல் மகன் சையதும் இடம் பெற்றிருந்தார்.
அவன் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் கரம் பற்றி மைதானத்திற்குள் அழைத்து வந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=H4DYEgcCJ0w” width=”560″ height=”315″]
(riz)

