போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதன்பின் 2009-ல் இருந்து தற்போது வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் தொடரை கைப்பற்றியுள்ளது.
ரியல் மாட்ரிட் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2021-ஆம் ஆண்டு வரை இருக்கிறது. இருப்பினும் மெஸ்சியின் சம்பளத்தை விட தன்னுடைய சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் சம்பளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று ரியல் மாட்ரிட் அணியிடம் ரொனால்டோ வலியுறுத்தி வந்த நிலையிலேயே அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இத்தாலி கிளப்பான யுவான்டஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்க இருப்பதாகவும், ரொனால்டோவுடன் பேசியதாகவும் இதற்கிடையே 100 மில்லியன் யூரோவிற்கு (சுமார் 800 கோடி ரூபாய்) யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இணைப்புச் செய்தி;