ஒருபக்கம் உடல் பருமனானவர்கள் ஒல்லியாக வேண்டுமே என டயட் செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒல்லியானார்கள் என்னென்னவோ சாப்பிட்டும் உடல் ஏறவில்லையே என கவலைப் படுவதுண்டு.
உடல் ஒல்லியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரியான உணவை தேர்ந்தெடுக்காததே. டயட் தவிர்த்து உடலில் ஏதாவது பிரச்சினைகள், தைராய்டு நோயின் அறிகுறி, வயிற்றில் பூச்சி, கல்லீரல் பாதிப்புகள், சர்க்கரை நோய், என பலவும் காரணங்கள் இருக்கலாம்.
அத்திப் பழம் :
அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்
உளுந்து :
ஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள்.
வெந்தயம் :
வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும்
உலர் திராட்சை :
தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்
எள்ளு :
எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மதிய தூக்கம் :
மத்தியம் ஒரு 20 நிமிடங்கள் தூங்கினால் உடல் எடை கணிசமாக கூடும். இது நிருபீக்கப்பட்ட உண்மை. அதிகம் தூங்கக் கூடாது. பின்னர் இரவில் தூக்கமில்லாமல் அவஸ்தைப் பட நேரிடும்.
பாதாம் பால் :
பாதாம் பாலில் அதிக புரதம் இருப்பதால் போஷாக்கை உடலுக்கு அளிக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டச் செய்யும். தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
தயிர் :
தயிர் அல்லது யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள். லஸ்ஸியாக சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு. உடல் எடை கணிசமாக கூடும். தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
2 மணி நேரத்திற்கு ஒருதடவை பால் :
காலை முதல் இரவு வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இதற்கு பால் வைத்தியம் என்று பெயர். அப்படி தொடர்ந்து குடிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும்.