ரொய்ஸ் பெர்ணான்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – நீர்கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணாண்டோ முன்வைத்த பிணை மனுவை நீதிமன்றம் இன்று(17) நிராகரித்து தீர்பளித்துள்ளது.

சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றின் மேலதிக நீதவான் டி.என்.எல். மாவத்த உத்தரவிட்டுள்ளார்.