ஐபில் தொடரில் அவுஸ்திலேியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் தலைமையில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித்தலைவரும், IPL தொடரில் பெங்களூர் அணித்தலைவருமான விராட் கோஹ்லிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், கோஹ்லி உடற் தகுதியில் தேர்ச்சிப் பெற்று பெங்களூர் அணிக்கு திரும்பும் வரை வாட்சன் அணித்தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL 10ல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும் முதல் நான்கு போட்டிக்கு வாட்சன் அணித்தலைவராக செயல்படுவார் என கூறப்படுகிறது.