மியன்மார் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று(06) சந்தித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று(05) மியன்மார் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்தியாவில் உரிய அனுமதியின்றி தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.
இந்தியாவின் உதவியுடன் மியன்மாரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
(rizmra)