ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட அழகியின் விருது பறிபோன பரிதாபம்.. (VIDEO)

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களை விமர்சித்தமையினால் அந்நாட்டு தேசிய அழகிக்கான விருது பறிபோனது.

மிஸ் மியன்மார் (Miss Myanmar)போட்டியில் தெரிவான அந்நாட்டு யுவதி ஒருவர் மியன்மாரில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் காணொளி ஒன்றை வெளிட்டமையினால் அவருக்கான விருது மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டை சேர்ந்த 19 வயதுடைய Shwe Eain Si எனும் யுவதி அண்மையில் தேசிய அழகிப் போட்டியில் பங்கேற்று அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அழகியாக தெரிவு செய்யப்பட்டு சில தினங்களின் பின்னர் அந்நாட்டு ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பிலான தனது அபிபிராயத்தினை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ரோஹிங்யர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள், அவர்கள் தீவிரவாத சிந்தனையுடையவர்கள், அவர்கள் நாட்டிலிலிருந்து வெளியேற்றப்படுவது சரியான செயலாகும் என அந்த காணொளியில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த யுவதிக்கு தேசிய அழகிக்கான குணம் இல்லை என அழகிகளை தெரிவு செய்வதற்கான குழு தெரிவித்துள்ளது. தேசிய அழகிக்கான விருதும் பறிப்போனமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோ..

 

(rizmira)