ரோஹிதவின், புதிய படைப்பாக தமிழில் பாடல் அல்பம்.. (VIDEO)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, தனது புதிய படைப்பாக தமிழ் மொழியில் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ பாடல் பாடி இசை அல்பங்களை வெளியிடுவதில் திறமையான ஒருவராகும்.

இந்நிலையில் முதல் முறையாக அவர் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் மொழியில் பாடல் ஒன்றை பாடி தனது youtube பக்கத்தில் வெளியிட்டுஇந்த பாடல் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.

 

குறித்த பதிவில், “நீண்ட காலமாக தமிழ் பாடல் ஒன்றை பாட வேண்டும் என் ஆசையில் இருந்தேன். இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். தமிழ் மொழி உச்சரிப்பில் குறைகள் இருந்தால் கோபப்படாதீர்கள். பரீட்சிக்கும் விதமாக இந்த வேலை செய்யப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma