ரோஹிதவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க திகதி குறிப்பு..

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் மாதம் 03ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனை கொழும்பு நீதாவான் நீதிமன்றம் இன்று(05) தீர்மானித்தது.

இரண்டு வருட காலத்தில் 412 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்துகள் ஈட்டியமை தொடர்பில் விபரம் தெரிவிக்காமை தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)