நீதிமன்றத்தில் முன்னிலையான கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று(04) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருவாத்தோட்ட பொலிஸாரிற்கு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.