ரோஹித்தவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி…

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) அனுமதியளித்துள்ளது.

தனது வருமானத்தை மீறி சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ரோஹித்த அபேகுணவர்த்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெப்ரவரி 18ம் திகதி முதல் மார்ச் 3ம் திகதி வரை வௌிநாட்டில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள சந்தேகநபர் அனுமதி கோரியிருந்தார்.

இதனை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன, ரோஹித்த வௌிநாடு செல்ல அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma