றம்புக்கனைக்கும் கடுகண்ணாவிற்கும் இடையிலான புகையிரத சேவைகள் இரத்து

றம்புக்கன கடுகண்ணாவ புகையிரத பாதையில் பலன மற்றும் இகல கோட்டைக்கும் இடையே புகையிரதம் ஓன்று பாதையை விட்டு விலகியதால், அப்பாதையின் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது .

மீண்டும் சேவை  வழமை நிலைக்கு கொண்டு வர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதே தகவல் தெரிவிக்கின்றது.