போதை பொருள் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு றம்புக்கனை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 05 பேர் நேற்றிரவு(18) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபர்கள் றம்புக்கனை – குடாகம பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யவதற்காக றம்புக்கனை காவற்துறைக்கு தவிர்த்து மேலதிக பொலிஸ் நிலையங்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.