றுஹுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகம், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக, குறித்த பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் அடங்களாக ஐந்து பீடங்கள் மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று(08) பிற்பகல் 3 மணிக்கு முன்னர், விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால், மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.